தமிழில் சூர்யாவுடன் ரெட்ரோ என்ற படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே, அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். அதற்குப் பிறகு, விஜய்யுடன் ஜனநாயகன் என்ற படத்தில் மற்றும் ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா 4 என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும், ரஜினிகாந்தின் கூலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
இந்நிலையில், ஹிந்தியில் நடிகர் வருண் தவானுடன் இணைந்து அவர் ஒரு புதிய படத்தில் நடித்துவந்தார். அந்த படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு ரிஷிகேஷ் பகுதியில் நடைபெற்றது.
அங்கு படப்பிடிப்பின் கடைசி நாளன்று, நடிகை பூஜா ஹெக்டே, நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து ஆற்றில் குதித்துள்ளார். இந்தக் காட்சி உள்ள வீடியோவை இணையத்தில் பகிர்ந்த அவர், அந்த ஹிந்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு இனி முடிவடைந்துவிட்டது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.