சென்னையில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவின் மெஹந்தி, சங்கீத் மற்றும் வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்த நிலையில், திருமணம் தாய்லாந்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. நிக்கோலாய் சச்தேவ் தனது மனைவி வரலட்சுமி சரத்குமாருக்கு தாலி கட்டிய தருணங்களும் சரத்குமார், சாயா தேவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர் அட்சதை போட்டு மணமக்களை வாழ்த்தும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
கடந்த ஜூலை 3-ஆம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
அரசியல் தலைவர்களும் திருமண விழாவில் கலந்து கொண்டு வரலட்சுமி சரத்குமாரை வாழ்த்தினர். திருமணத்தை தாய்லாந்தில் ஒரு தனித்தீவில் சுற்றம் மற்றும் நண்பர்கள் சூழ நடத்திய வரலட்சுமி சரத்குமார் அதன் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.