Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

வதந்திகளை ஏமாளிகள் தான் பகிர்வர் முட்டாள்கள் நம்புவர்… தன்னை பற்றிய வதந்திக்கு பதிலடி கொடுத்த நடிகை மீனா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் 90களில் உச்சத்தில் இருந்தவர் நடிகை மீனா. அனைத்து பிரபல நட்சத்திர நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் நடித்த எஜமான், வீரா, நாட்டாமை, நாடோடி மன்னன், முத்து, அவ்வை சண்முகி போன்ற பல திரைப்படங்கள் மெகா ஹிட்டாகின.

நடிகை மீனாவை பற்றிய வதந்திகள் அதிகமாக பரவி வருவது அடிக்கடி நடக்கும் செயலாகவுள்ளது. இந்நிலையில் மீனா இரண்டாவது திருமணம் செய்ய போகிறார், இந்த பிரபலத்தை திருமணம் செய்யப் போகிறார் என்று செய்திகள் சில நாட்களாக உலா வந்தன.

இந்நிலையில், நடிகை மீனா தனது எக்ஸ் பக்கத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதில் வதந்திகளை வெறுப்பாளர்கள் உருவாக்குவார்கள், அதனை ஏமாளிகள் பகிர்வர் மற்றும் முட்டாள்கள் நம்புவர் என்று பதிவிட்டுள்ளார். இப்பதிவு சமீபத்தில் அவரைப் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிலளித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News