துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ‘லோகா’.டோமினிக் அருண் இயக்கிய இப்படத்தில், ‘பிரேமலு’ புகழ் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சூப்பர்வுமன் கதையை மையமாகக் கொண்டு பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் திரைக்கு வந்த நாள் முதல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் மம்முட்டி ‘லோகா’ யுனிவர்ஸில் இணைய உள்ளார். அடுத்தடுத்த பாகங்களில் ‘மூத்தன்’ என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் மம்முட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட போஸ்டரில் “Happy Birthday Moothon” எனக் குறிப்பிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
q