Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

லைவ் கான்செர்டில் வெளியாகும் ஹிட்லர் படத்தின் ‘அடியாத்தி’ பாடல்! #HITLER

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, சமீபத்தில் நடித்த ‘மழைப்பிடிக்காத மனிதன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, ‘படைவீரன்’ மற்றும் ‘வானம் கொட்டட்டும்’ போன்ற படங்களை இயக்கிய தனா இயக்கத்தில், ‘ஹிட்லர்’ என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் ‘டப்பாஸ்’ சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.

இந்த படத்தில், ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். 

படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில், திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இப்படத்தில், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் முன்பே வெளியானது. தற்போது, இப்படம் செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த பாடல் ‘அடியாத்தி’ என்ற பாடல் இலங்கையில் இன்று நடைப்பெறும் லைவ் கான்செர்டில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News