Wednesday, October 2, 2024

லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க போவது யார்? தனுஷா அல்லது துருவ் விக்ரமா? தீயாய் பரவும் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா ஆகியோர் நடித்த படம் “லப்பர் பந்து” சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்தார்.

சினிமா துறையினரின் மட்டுமல்ல, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்று, இப்படம் நல்ல வசூல் சாதனையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், தமிழரசன் பச்சமுத்து தனது அடுத்த முயற்சியாக தனுஷை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். அந்த கதையில் நடிக்க தனுஷ் சம்மதம் தெரிவித்திருந்தாலும், இப்போது அவர் “இட்லி கடை” படத்தை இயக்கி நடித்து வருவதுடன், “குபேரா” மற்றும் “இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு” போன்ற படங்களிலும் தொடர்ந்து நடிக்க இருப்பதால், உடனடியாக கால்ஷீட் வழங்க இயலாது என்று கூறியுள்ளார்.

இதன் காரணமாக, தமிழரசன் பச்சமுத்து தற்போது “பைசன்” படத்தில் நடித்து வரும் துருவ் விக்ரமை சந்தித்து இன்னொரு கதையை கூறியுள்ளார். “பைசன்” படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு, துருவ்வை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News