Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

லண்டனில் உள்ள பிரபல லெய்செஸ்டர் ஸ்கொயர் ஸ்கிரீனில் திரையிடப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது தி கோட் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், “தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்” (‛தி கோட்’). இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். “தி கோட்” படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் டிஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் பெரிதும் கவனம் ஈர்த்தன. இப்படத்தின் நான்கு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், “தி கோட்” திரைப்படம் லண்டனில் உள்ள பிரபல விளம்பர திரையான லெய்செஸ்டர் ஸ்கொயர் ஸ்கிரீனில் திரையிடப்பட்டது. இந்த திரையில் தென்னிந்திய திரைப்படம் திரையிடப்படுவது இதுவே முதல் முறை. இப்படம் இங்கிலாந்து முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஏஜிஎஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

- Advertisement -

Read more

Local News