Tuesday, October 22, 2024

4K-ல் ரீ ரிலீஸாகும் மம்மூட்டியின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான, பிரபல நடிகர்கள் நடித்த தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் தற்போது டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு மீண்டும் வெளியிடப்படுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தமிழில் மட்டுமல்ல, மலையாளத்தில் மணிசித்திரதாழ், ஸ்படிகம், தேவதூதன் போன்ற படங்கள் ரீ ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. அதேபோல், தற்போது மம்முட்டி நடிப்பில் 1986-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆவநாழி திரைப்படம் 4K முறையில் டிஜிட்டலாக மாற்றப்பட்டு ரீ ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இயக்குனர் ஐ.வி சசி இயக்கிய இப்படத்தில் கதாநாயகிகளாக கீதா மற்றும் நளினி நடித்துள்ளனர். மலையாள திரையுலகில் இந்த திரைப்படம் 20 திரையரங்குகளில் தொடர்ந்து 25 நாட்கள் ஓடி, 100 நாள் வெற்றி பெற்ற படம் ஆகும். போலீசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையேயான மோதல் பின்னணியில் உருவாக்கப்பட்ட இப்படம், வெற்றியைத் தொடர்ந்து 1987-ல் தமிழில் “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” என்ற பெயரில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்தார். இதில் சத்யராஜ் கதாநாயகனாக நடித்தார், மேலும் மலையாளத்தில் நடித்த கீதா மற்றும் நளினி இருவருமே இதில் நடித்தனர். இப்படமும் வெற்றி பெற்றது.

மேலும், இதே வருடத்தில் தெலுங்கில் கிருஷ்ணம் ராஜு நடித்து “டெத் சென்டன்ஸ்” எனவும், ஹிந்தியில் வினோத் கன்னா நடித்து “சத்தியமேவ ஜெயதே” எனவும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News