Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

ரீ ரிலீஸாகிறதா உலகநாயகன் கமல்ஹாசனின் குணா திரைப்படம்? ஆர்வத்தோடு காத்திருக்கும் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1991 ஆண்டில் தீபாவளி அன்று சந்தான பாரதி இயக்கத்தில் வெளிவந்த குணா படத்தில் கமல்ஹாசன், ரோஷினி, ரேகா, ஜனகராஜ், அஜய் ரத்னம், எஸ். வரலட்சுமி, கிரீஷ் கர்னாட், எஸ். பி. பாலசுப்பிரமணியம், சரத் சக்சேனா, காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி மற்றும் அனந்து ஆகியோர் நடித்தனர். இளையராஜா இசையமைத்தார்.

33 ஆண்டுகள் கடந்த பிறகும் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி இன்றைய இளம் தலைமுறையும் குணா படத்தையும் அதில் உள்ள வசனங்களையும் பாடல்களையும் கொண்டாடி வருகின்றனர். இந்த வருடத்தின் தொடக்கத்தில் மலையாள படமான மஞ்சும்மேல் பாய்ஸ் ரூ.200 கோடி வசூல் செய்தது. குணா குகை மற்றும் கண்மணி அன்போடு காதலன் பாடல் ஆகியவை இந்த வெற்றிக்கான முக்கிய காரணங்களாக இருந்தன.

இந்த நிலையில், கமல்ஹாசன் ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், குணா திரைப்படம் டிஜிட்டல் வடிவத்தில் மெருகூட்டப்பட்டு வரும் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் மீண்டும் வெளியிடப்படுகிறது. தமிழ் திரைப்பட ஆடியோ உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வந்த பிரமிட் ஆடியோ குரூப் நிறுவனம் குணா படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News