ஷங்கர் இயக்கத்தில் நடித்த ‘கேம் சேஞ்சர்’ படத்திற்குப் பிறகு, தெலுங்கில் புச்சி பாபு இயக்கும் தனது 16வது படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இந்தப் படத்திற்கான பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளர் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.

சில நாட்களாக, இந்தப் படத்திலிருந்து ஏ.ஆர். ரஹ்மான் விலகிவிட்டதாகவும், அவரின் பதிலாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாகவும் ஒரு செய்தி இணையத்தில் பரவி வந்தது.இதற்கிடையில், இப்படக்குழு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “ராம்சரண் தனது 16வது படத்திலிருந்து ஏ.ஆர். ரஹ்மான் விலகியுள்ளார் என்ற செய்திகள் வெறும் வதந்தி மட்டுமே” என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஏ.ஆர். ரஹ்மான் இதுவரை இந்தப் படத்திற்காக மூன்று பாடல்களை தயாரித்து கொடுத்துள்ளதாகவும், மீதமுள்ள பாடல்களை உருவாக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர். இப்படத்தில் ராம்சரணுடன் ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ஜெகபதி பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.