Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

ராஜமெளலி படத்தில் நடிக்கிறாரா நடிகர் நாசர்… வெளியான புதுப்பட அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்குத் திரையுலகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவை உலக அளவில் பிரபலமாக்கியவர் இயக்குனர் ராஜமவுலி என்றால் மிகையாகாது. அவரது ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ ஆகிய படங்கள் இந்திய திரையுலகத்தையும் கடந்து உலக சினிமா ரசிகர்களையும் வியக்க வைத்தன‌ எனலாம்.

அடுத்ததாக ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இப்படத்திற்கான முன்கட்ட பணிகள் சில மாதங்களாகவே நடந்து வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் நடிகர் நாசரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் நடிகர் நாசர் இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர் நடிகைகளுக்கு நடிப்புப் பயிற்சித் தருவார் எனத் தகவல். நடிப்புடன் வசன மற்றும் உச்சரிப்பு பயிற்சிகளும் இங்கு நடைப்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.நாசர், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார், மற்றும் ‘பாகுபலி’ படத்தில் பிஜ்ஜல தேவா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News