Tuesday, November 19, 2024

‘ரன் பேபி ரன்’ பட இயக்குனரின் புதிய படத்தில் நடிக்கும் ஆர்யா… ராமேஸ்வரத்தில் துவங்கிய படப்பிடிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளிவந்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ‘ரன் பேபி ரன்’ திரைப்படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஆர்யா நடிக்கவுள்ளார். 

மலையாளத்தின் பிரபல கதை ஆசிரியரான முரளி கோபி இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இவர் கதையில் உருவான லூசிபர் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. மார்க் ஆண்டனி படத்தை தயாரித்த வினோத குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று ராமேஸ்வரத்தில் துவங்கியது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

- Advertisement -

Read more

Local News