Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ரஜினியின் வேட்டையன் டப்பிங் பணிகளில் துஷாரா விஜயன்! #Vettaiyan

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தனது 170-வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ‘ஜெய்பீம்’ பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. இதில் அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி, சென்னை, மும்பை, திருநெல்வேலி, பாண்டிச்சேரி போன்ற பல்வேறு பகுதிகளில் நடந்தது. கடைசியாக பாண்டிச்சேரியில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது, அதற்காக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இதன் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகை துஷாரா விஜயன் ‘வேட்டையன்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News