Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ரஜினிகாந்த்-ஐ சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்…நடிகர் சங்க கட்டிடப் பணிகள் குறித்து ஆர்வமாக கேட்டறிந்த ரஜினிகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்கு விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், நெப்போலியன் என பல நடிகர்கள் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் சங்க நிர்வாகிகள் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்துள்ளனர் அது குறித்து அறிக்கையும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில்,

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் திரு.கார்த்தி, துணைத் தலைவர்கள் திரு.பூச்சி எஸ்.முருகன், திரு.கருணாஸ் ஆகியோர் இன்று (01.07.2024) போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான திரு.ரஜினிகாந்த் அவர்களிடமும் மற்றும் திரு.கமல்ஹாசன் அவர்களிடமும் ஆலோசனை பெறுவது வழக்கம். அந்த வகையில் அடுத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ள நட்சத்திர கலை விழா குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்கள். வேகமாக நடைபெற்று வரும் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் குறித்து ஆர்வமாக கேட்டறிந்த திரு.ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் நேரில் வந்து கட்டிடப் பணிகளைப் பார்வையிட உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News