ரஜினிகாந்தின் “பேட்ட” படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் தமிழில் மாளவிகா மோகனனை அறிமுகம் செய்தார். பின்னர் லோகேஷ் கனகராஜ், விஜய் நடித்த “மாஸ்டர்” படத்தில் ஹீரோயினாக அழகு பார்த்தார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுடன் “மாறன்” படத்தில் நடித்த மாளவிகா மோகனனுக்கு பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.





“தங்கலான்” படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், மீண்டும் இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைத்துள்ளார். சமீபத்தில், தண்ணீரில் வெள்ளை நிற உடையை அணிந்து கொண்டு தேவதை போல ஜொலிக்கும் காட்சிகளை வெளியிட்ட அவர் தற்போது வெள்ளை நிறத்திலான சேலையை அணிந்து கொண்டு கவர்ச்சி கடலாக மாறியுள்ளார்.ஒரு பக்கம் சேலையை சரியவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.

40 லட்சம் ரசிகர்களையும் இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள மாளவிகா மோகனன், அடுத்து பிரபாஸுக்கு ஜோடியாக “ராஜாசாப்” படத்திலும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.