தனது படங்கள் வெற்றி பெறுகிறதோ இல்லையோ அதைப்பற்றி கவலைப்படாமல், தொடர்ந்து நடிப்பில் தீவிரமாக கவனம் செலுத்தி தனது அடுத்த படங்களில் பணியாற்றி வருகிறார். பேச்சுலர் படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த திவ்யபாரதி உடன் இணைந்து கிங்ஸ்டன் என்னும் படத்திலும் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார். மேலும், காதலிக்க யாரும் இல்லை படத்தில் வைசா வில்சன் உடன் இணைந்து நடித்து வருகிறார். அதே சமயம் சில படங்களுக்கு இசையமைத்தும் வரும் ஜி.வி. பிரகாஷ், தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

அதாவது, பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் பசுபதி நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தின் முதல் பாடல் தயாரிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தங்கலான் படம் தொடர்ந்து தள்ளிப்போகும் நிலையில், இந்த படத்திலிருந்து ஒரு முக்கியமான செய்தியை கொடுத்து சியான் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளார்.


மேலும், துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் முதல் பாடலும் தயாரிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என ஜி.வி. பிரகாஷ் அறிவித்துள்ளார். சொந்த பிரச்சனையில் சிக்கித் தவித்து வந்த ஜி.வி. பிரகாஷ் மீண்டும் சினிமாவில் தனது முழு கவனத்தை திருப்பியுள்ள நிலையில், தங்கலான் படத்தின் இசை முழுமை பெற்று விரைவில் பட வெளியீட்டை பா. ரஞ்சித் அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர். ஜி.வி. பிரகாஷின் அடுத்த படங்களும் சீக்கிரமே வெளியாகும் என்றும் கூறப்படுகின்றன. தங்கலான் படத்தின் முதல் பாடல் இந்த வாரத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.