நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ள இவர், தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தமிழில் அவர் கடைசியாக சைரன் படத்தில் நடித்தார். அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்ட உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. ஹிந்தியிலும் பேபி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.


கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தாலும், அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. சினிமாவில் ராசியைவிட திறமை முக்கியம் என்பதால், தமிழில் அவருக்கு இறங்குமுகம் இருந்தாலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏறுமுகமே கிடைத்தது.


நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். படத்தை பார்த்த அனைவரும் வாயடைத்துப்போனார்கள். கீர்த்தி சுரேஷ் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார். படம் மெகா ஹிட்டாகி, கீர்த்திக்கு நல்ல பெயரையும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. இதனால் அவர் இந்திய அளவில் பிரபலமானார்.


கீர்த்தி சுரேஷ் சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கிறார். அவர் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். இப்போதும் ஃபோட்டோஷூட் ஒன்றின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த முறை அவர் மாடர்ன் உடையில் கொஞ்சம் கிளாமராக காட்சியளிக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் புகைப்படங்களை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.