Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய மம்மூட்டி… என்னன்னு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெஸ்பர் கோட்டக்குன் மம்முட்டியின் தீவிர ரசிகர். இவர் கடந்த சில வருடங்களாக கழுத்துக்கு கீழே உடல் இயங்காத வகையில் ஒரு விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மம்முட்டியை எப்படியும் சந்தித்து விட வேண்டும், அப்போது அவருக்கு ஒரு பரிசும் அளிக்க வேண்டும் என்பதற்காக தானே பிரத்யேகமாக துணியை வரவழைத்து தனது பற்களுக்கு இடையே தூரிகையை பிடித்தபடி துணியில் டிசைன் செய்து பின்னர் அதை சட்டையாக மாற்றியுள்ளார். மம்முட்டிக்கு நெருங்கிய ஒரு நண்பரின் மூலமாக அவரை சந்திக்கும் வாய்ப்பு ஜெஸ்பருக்கு கிடைக்க அப்போது தான் உருவாக்கிய சட்டையை கொடுத்ததுடன், இதேபோன்று தான் வரைந்திருந்த மம்முட்டியின் ஓவியம் ஒன்றையும் அவருக்கு பரிசளித்தார் ஜெஸ்பர். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் மம்முட்டி அந்த சட்டையை பயன்படுத்தாமல் அப்படியே மறந்து விட்டாரோ என்கிற சந்தேகம் ஜெஸ்பருக்கு இருந்தது. இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தான் மறக்காமல் அந்த சட்டையை ஒரு விழாவிற்கு அணிந்து வந்து தனது ரசிகரின் ஆசையை பூர்த்தி செய்துள்ளார் மம்முட்டி.

- Advertisement -

Read more

Local News