Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

முழுக்க முழுக்க கடலில்… சிம்பு தேவனின் ‘போட்’ பட ட்ரெய்லர் வெளியானது!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, அறை எண் 305இல் கடவுள் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் சிம்புதேவன்.இவரது இயக்கத்தில் வெளியான ‘கசடதபற’ படம் சிறந்த திரைக்கதைக்கான பல விருதுகளை பெற்றது. தற்போது இவர் இயக்கி வரும் படம் ‘போட்’.

மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமாரின் தயாரிப்பில் உருவாகி வருகிறது இப்படம். முழுக்க முழுக்க கடலில் நடக்கும் கதையாக இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவுவை கவனிக்கிறார்.

இப்படத்தில் யோகி பாபு, கௌரி ஜி கிஷன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. போட் திரைப்படம் வரும் ஆக. 2 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News