சமீப வருடங்களாக தென்னிந்திய மொழி நட்சத்திரங்கள் ஒவ்வொரு மொழியிலும் மாறி மாறி நடிப்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழில் மட்டுமே படங்களை இயக்கி நடித்து வந்த சேரன் முதன்முறையாக மலையாள திரை உலகில் அடி எடுத்து வைத்து ‘நரிவேட்டை’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள இளம் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ் நடித்துள்ளார். இப்படத்தில் சேரனின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போல்டரில் காவல்துறை அதிகாரியாக காணப்படுகிறார்.
