பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மறைந்த இந்த நாளில், அவர் வாழ்ந்த சென்னை குடியிருப்பு சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படவுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமையாக விளங்கியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் தெருவுக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்று அவரது மகன் எஸ்.பி.பி சரண் தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று, சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் முதல் தெருவுக்கு ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ என்று பெயர் வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திரையுலகில் எஸ்பி.பி அவர்களின் கலைச் சேவையை சிறப்பித்து இந்த பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் கூறியுள்ளார். தனது கோரிக்கையை உடனடியாக ஏற்று முதல்வர் இதை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் எஸ்.பி.பி சரண்.