Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

மீண்டுய் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்கும் ‘கிழக்கு சீமையிலே’ பட நாயகி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கிழக்கு சீமையிலே, புதுப்பெட்டி பொன்னுத்தாயி, ராமன் அப்துல்லா, என்னவளே உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அஸ்வினி நம்பியார் (ருத்ரா). அவர் பாரதிராஜா இயக்கிய ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில், ராதிகாவின் மகளாக விக்னேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதோடு, டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார். பின்னர், சினிமா வாய்ப்புகள் குறைந்தபோது திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட அஸ்வினி, தற்போது மீண்டும் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வருகிறார். 

சினிமாவைத் தவிர்த்து, வெப் சீரியல்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இதன் ஒரு பகுதியாக, ஒரு வெப் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News