நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள அவரது 50வது படமான ‘ராயன்’ ஜூலை 26ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ்ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் பேசும்போது, தனுஷ் புதிதாக என்னிடம் ஒரு கதையை கூறினார், அதனை தனுஷ் இயக்கவுள்ளார் என தெரிவித்துள்ளார்.
இதில் முதன்மை கதாபாத்திரத்தில் என்னுடன் இணைந்து நித்யா மேனன் நடிக்கவுள்ளார் என அவர் பகிர்ந்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.