விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 50 வது திரைப்படம் “மகாராஜா.” குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இதை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியானது மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு சில நாட்களுக்கு முன் அறிவித்தது.படத்தின் ப்ரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி துபாயில் உள்ள மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் மகாராஜா படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டது. இதைப் பார்ப்பதற்காக படக்குழுவினர் துபாய் சென்றனர்.
புர்ஜ் கலீஃபாவுடன் விஜய் சேதுபதி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அங்கு நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.இந்த நிலையில், ஜூன் 14ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ரிலீஸ் ட்ரைலர் வெளியாகியுள்ளது. சலூன் கடை வைத்திருக்கும் விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களே இப்படத்தின் கதை என இப்படத்தின் ட்ரெய்லர் உணர்த்துகிறது.