Saturday, September 21, 2024

மாஸாக கார் ஓட்டி செல்லும் அருண் விஜய்… ரெட்ட தல படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஓவர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த ஜனவரி மாதம் ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்த மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியானது. இதன் வெற்றியைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வனங்கான் படமும் மற்றும் பார்டர், AV 36 படங்களில் அருண் விஜய் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன், அருண் விஜயின் அடுத்த படமான ரெட்ட தல படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கிறார். அவர் முன்னதாக வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சாம்.சி.எஸ் இசையமைப்பாளராகவும், அன்பறிவு ஸ்டன்ட் மாஸ்டர்களாக பணியாற்றுகின்றனர்.

இப்படத்தை பிடிஜி யூனிவர்சல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டரை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டிருந்த நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.தற்போது இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அருண் விஜய் கார் ஓட்டியபடி காட்சி அமைந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News