Touring Talkies
100% Cinema

Monday, April 7, 2025

Touring Talkies

மாறி மாறி நட்பு பாராட்டிய நடிகை ஷான்வே மேகன்னா மற்றும் மணிகண்டன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஷான்வே மேகன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் மணிகண்டனுடனான புகைப்படங்களைப் பகிர்ந்து, ”எண்ணிக்கையில்லா உரையாடலகள், கணக்கிலடங்கா இரவு நேர உரையாடல்கள், 24 மணிநேரமும் காமெடி, சிரிப்பு, தெலுங்கு தமிழ் இங்கிலிஷ் கலந்து நிகழும் கற்றல்கள் என உங்களைப் போன்ற சிறந்த நடிகருடன் பணிபுரிவது மிகவும் அழகாக இருக்கிறது. உங்களிடம் ஒரு சிறந்த சக நடிகரை மட்டுமல்ல, ஒரு அற்புதமான நண்பரையும் கண்டுபிடித்திருக்கிறேன். அதனால் நான் நம்பமுடியாத அதிர்ஷ்டசாலி என்றே நினைக்கிறேன். நிறைய அன்பும் மரியாதையும்!!” எனப் பதிவிட்டிருந்தார். இதனையே எக்ஸ் தளத்திலும் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த மணிகண்டன், ”அருமையான சக நடிகராகவும் நண்பராகவும் இருப்பதற்கு நன்றி ஷான்வி மேகன்னா. உங்கள் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை உங்களை ஒரு புதிய இடத்திற்கு அழைத்துச் செல்லும்” என வாழ்த்தி பதிவிட்டுள்ளார். இவர்கள் இருவரும் குடும்பஸ்தன் படத்தில் நடித்து அப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News