சின்னத்திரையில் ஜொலித்த வாணி போஜன் 2020-இல் வெளிவந்த ட்ரிபிள்ஸ் என்ற சீரியலில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின், அசோக் செல்வன் நடித்த ஓ மை கடவுளே திரைப்படத்தில் மீரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. வழக்கமாக அவர் நடிக்கும் துணை கதாபாத்திரங்களாக இல்லாமல், முக்கிய கதாபாத்திரமாக இருந்தது. இதன் பின்னர், அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.


மலேசியா டு அம்னீசியா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த வாணி போஜன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மட்டும், பாயும் ஒளி நீ எனக்கு, லவ், அஞ்சாமை மற்றும் செங்களம் என்ற வெப் தொடர் வெளியானது.



தற்போது அவரின் கைவசம், ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘கேசினோ’, ‘அர்யன்’ போன்ற திரைப்படங்கள் உள்ளன. இப்படி அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் வாணி போஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘பிளாக் அண்ட் பிளாக்’ நிறத்தில் அட்டகாசமான போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.