விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன் போன்ற படங்களில் எடிட்டராக பணியாற்றிய பிரபல எடிட்டர் லியோ ஜான் பால், தற்போது இயக்கியுள்ள புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு மார்கன் என பெயரிடப்பட்டுள்ளது.
கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம், ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலானது. தற்போது, மார்கன் திரைப்படத்தில் இடம்பெறும் செப்பம்மா என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

