மாரி செல்வராஜ் இயக்கும் வாழை படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாமன்னன் படத்துக்கு அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து இயக்குகிறார் மாரி செல்வராஜ்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இந்தப் படம் ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளது.


சிறுவர்கள் பிரதான பாத்திரத்தில் நடிக்க, சிறுவர் சினிமாவாக இப்படம் உருவாகிவுள்ளது. மேலும், இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா போன்றோரும் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், வாழை படத்தின் முதல் பாடல் இன்று (ஜூலை 18) வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் கபடியை மையமாக வைத்து துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் படத்தை இயக்கியுள்ளார் அப்படமும் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.