தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி, தற்போது இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா என்ற அடையாளத்தை மறைத்துவிட்டு நடிகர் எஸ்.ஜே. சூர்யாவாக ஆகிவிட்டார். நடிக்கும் அனைத்து கதாப்பாத்திரத்திலும் அவருடைய பெஸ்டை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி படத்தில் தன்னுடைய அபாரமான நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதைத் தொடர்ந்து ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர், மாநாடு, டான் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் மீண்டும் ஒரு இடத்தை பிடித்தார்.

கடந்த ஆண்டு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் மார்க் ஆண்டனி திரைப்படம் வசூலில் மாபெரும் உச்சத்தை தொற்றியது. தமிழ் மற்றும் தெலுங்குவில் பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். வீர தீர சூரன், இந்தியன் 3, ராயன், கேம் சேஞ்சர், எல்.ஐ.சி, சூர்யாஸ் சாட்டர்டே பல சுவாரசிய லைன் அப்ஸ்களை கையில் வைத்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா. இந்நிலையில் எஸ்.ஜே. சூர்யா அடுத்ததாக பகத் பாசிலுடன் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை விபின் தாஸ் இயக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.