Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் அருண் விஜய்யின் மிஷன் பட வில்லன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் மிஷன் : சாப்டர் 1. ஒரு உளவாளியின் கதையை மையப்படுத்தி வெளியான இந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் கன்னட நடிகராக பரத் போபண்ணா. கன்னடத்தில் தற்போது வளர்ந்து வரும் நடிகரான இவர் தமிழைத் தொடர்ந்து மலையாளத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார். மலையாள இளம் நடிகர்களான லியோ புகழ் மேத்யூ தாமஸ், பிரேமலு புகழ் சங்கீத் பிரதாப் மற்றும் அர்ஜூன் அசோகன் ஆகியோர் இணைந்து நடித்து வரும் ப்ரொமான்ஸ் என்கிற படத்தில் இவர் வில்லனாக நடித்து வருகிறார்.

- Advertisement -

Read more

Local News