நடிகர் விஜய் “தமிழக வெற்றிக்கழகம்” என்ற புதிய அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். நேற்று அவர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்று, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்து பேசினார். அவருடன் இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

விஜய் நடிக்க இருக்கும் கோட் படத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் விஜய்காந்தின் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், விஜய் நேற்று விஜயகாந்த் வீட்டிற்கு சென்று, பிரேமலதாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.






மேலும் அவர்களோடு இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.