Tuesday, November 19, 2024

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ஷாருக்கான்… என்னதான் ஆச்சு?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஷாருக்கான் பாலிவுட்டின் பாட்சா என செல்லமாக அழைக்கப்படுவர். அவர் கடைசியாக நடித்த ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபில் கிரிக்கெட் அணிக்கு உரிமையாளரும் ஆவார். கடந்த மே மாதம் 21ஆம் தேதி கொல்கத்தா அணி போட்டியை பார்த்து விட்டு ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக அஹமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அடுத்த நாளே குணமாகி வீடு திரும்பினார்.

தற்பொழுது ஷாருக்கானுக்கு மீண்டும் ஒரு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. ஷாருக்கான் தற்போது கண் சிகிச்சைக்காக நேற்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் சென்றுள்ளார். அவர்கள் நினைத்தபோல சிகிச்சை நடக்காததால், ஷாருக்கான் இன்று அல்லது நாளை இதன் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார்.

ஷாருக்கான் மற்றும் அவரது மகளான சுஹானா கான் மற்றும் அபிஷேக் பச்சன் நடிக்கும் கிங் படத்தில் நடித்துள்ளார். பதான் படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஷாருக்கான் நடிக்கவுள்ளார்.

- Advertisement -

Read more

Local News