நடிகர் யாஷ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான கே.ஜி.எப் 1 மற்றும் கே.ஜி.எப் 2 ஆகிய திரைப்படங்களின் மூலம் இந்திய அளவில் மிகப் பிரபலமானவராக அறியப்பட்டார். இந்த திரைப்படங்கள் வெளியானதும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, சாதாரணமாகவே இல்லாத அளவுக்கு வசூல் சாதனைகளைப் படைத்தன. தற்போது, யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். டாக்ஸிக் என்ற பெயரிலான இந்தப் படத்தை பிரபல நடிகை மற்றும் இயக்குநரான கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார்.
கீது மோகன்தாஸ் தமிழில் மாதவன் நடித்த நளதமயந்தி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் லையர்ஸ் டைஸ் மற்றும் மூத்தோன் போன்ற படங்களை இயக்கி புகழையும் பாராட்டுகளையும் பெற்றவர். சிறுமியாக இருந்த காலத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய கீது, தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்ற படத்தில் ஒரு குழந்தை கதாபாத்திரமாக நடித்ததுவும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஹுமா குரேஷி மற்றும் நயன்தாரா போன்ற பிரபலங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் பிரம்மாண்ட செட் அமைத்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
கர்நாடகாவில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள வனத்துறையினர் டாக்ஸிக் படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே பீன்யா பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் சட்ட விரோதமாக வெட்டப்பட்டதாகவும், இது சாட்டிலைட் படங்களின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுமதி பெறாமல் மரங்களை வெட்டியதற்காக படக்குழுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில், நடிகர் யாஷ் ராமாயணா திரைப்படத்தில் ராவணனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.