Touring Talkies
100% Cinema

Sunday, August 3, 2025

Touring Talkies

மயில் போல் உடையணிந்து நடனம்… ரசிகர்களை சிலிர்க்க வைத்த ஜான்வி கபூர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருக்கு திருமணம் ஜூலை 12ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் மும்பையில் உலகின் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அணிந்து வந்த உடை பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இந்தியாவின் முன்னணி ஆடை வடிவமைப்பாளரான மணீஷ் மல்ஹோத்ரா தான் ஜான்வி கபூர் அணிந்து வந்த மயில் லெஹங்கா உடையை வடிவமைத்திருந்தார். முழுவதும் மயில் தோற்றம் கொண்ட ஸ்கர்ட் உடன் நீலமும், பச்சையும் என மயிலின் கழுத்தில் இருப்பது போல ஜான்வியின் பிளவுஸின் நிறம் இருந்தது. ஜான்வியின் இந்த தனித்துவமான உடைக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. மேலும், இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் மயிலாக மாறிய சின்ன மயிலு என்றும், மயிலு மயிலு மயிலம்மா என அவரை பார்த்து ரசிகர்கள் உருகி வருகின்றனர்.

ஜான்வி கபூர் ஆடை வடிவமைப்பாளர் கடினமான உழைப்பு தான் முழுக்க முழுக்க மயில் இறகு போல் ஆடையாக்க முடிந்தது என கூறி, ஆடை வடிவமைப்பாளரான மணீஷ் மல்ஹோத்ராவின் அர்ப்பணிப்புள்ள கலைஞர்கள் குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News