மின்னலே படத்தில் இருந்து துருவ நட்சத்திரம் வரை கௌதமேனன் இயக்கிய அனைத்து படங்களும் தனித்துவம் வாய்ந்தவை. அவரின் ஸ்டைலிஷான இயக்கத்தில் காக்க காக்க, வாரண மாயிரம், வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்ற படங்கள் முக்கியமானவை.

தற்போது, கௌதமேனன் தனது முழு கவனத்தையும் நடிப்பில் செலுத்தி வருகிறார். இதற்கு முக்கிய காரணம், அவர் இயக்கிய சில படங்கள் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது தான்.முக்கியமாக என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் ஜோஸ்வா போன்ற படங்கள் அவருக்கு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தியது.

நடிகர் விக்ரமுடன் இணைந்து அவர் எடுத்த துருவ நட்சத்திரம் படம் இன்னும் வெளியாவில்லை. இந்த படத்தின் மீதான கடன்கள் மற்றும் பிரச்சனைகள் காரணமாக ரிலீசை தடுக்கின்றனர், இது கடந்த நான்கு வருடங்களாக நீடிக்கிறது. இதற்காக விக்ரமிடம் இருந்து கூட எந்த உதவியும் கௌதமேனனுக்கு கிடைக்கவில்லை.

மேலும் கௌதமேனன் ஏதேனும் புதிய படங்களை இயக்க முயற்சித்தால், கடன்கள் மற்றும் பணப்பிரச்சனைகள் காரணமாக சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால் அவர் திரைப்படம் இயக்குவதை தற்சமயம் ஒதுக்கி வைத்துள்ளார். அதே நேரத்தில், அவருக்கு நடிப்பில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. சிறிய கேமியோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களுக்கு அவரை அணுகுகின்றனர், மற்றும் அவர் நடிப்பிலும் தன்னுடைய திறமையை நிரூபிக்கிறார்.

இப்போது, கௌதமேனன் மலையாளத் திரைப்படங்களை நோக்கியும் நகர ஆரம்பித்திருக்கிறார்.மலையாளத்தில் மம்மூட்டி மற்றும் நயன்தாராவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் கவுதம் மேனன். மேலும் அந்த படத்தை மம்மூட்டி தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.