அசோக் செல்வன் ஆண்டுக்கு ஒரு படம் கொடுத்தாலும் பரவாயில்லை என அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் தங்களது திருமணத்திற்கு முன்னரே ப்ளு ஸ்டார் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து நடித்திருந்தனர். இருவருக்குமான ஜோடி பொருத்தம் திரையில் பார்க்கும்போது சூப்பராக இருப்பதாக படம் ரிலீஸ் ஆன பிறகு ரசிகர்கள் தெரிவித்தனர். படம் வெளியான போது இருவரும் திருமணம் செய்து கொண்டிருந்தனர்.


இருவரது திருமணம் காதல் மற்றும் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமணம் கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி திருநெல்வேலியில் எளிமையான முறையில், இயற்கை சூழலுக்கு மத்தியில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதற்கான புகைப்படங்களும் வெளியிடப்பட்டது. பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இப்படியான நிலையில், இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதைக் வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி பாண்டியன் கடலில் இருக்கும் மூன்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மஞ்சள் நிற கவர்ச்சி ஆடையுடன், ஸ்டைலிஷான கண்ணாடியுடன் கீர்த்தி பாண்டியன் உள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.