Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

மகாராஜா பட இயக்குனருக்கு கிடைத்த மேலும் ஒரு அங்கீகாரம்! #MAHARAJA

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த மாதம், நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஸ்யப், நட்ராஜ் ஆகியோர் இணைந்து நடித்த “மகாராஜா” திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது மற்றும் வசூல் ரீதியாக உலகளவில் ரூ. 100 கோடி தாண்டி சாதனை படைத்தது.

இதையடுத்து, “மகாராஜா” திரைப்படம் ஓடிடியில் வெளிவந்தபோது கூட, ரசிகர்கள் மிகுந்த ஆதரவு அளித்தனர். இந்த படம் உலகளவில் மேலும் அதிக கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், தற்போது மெல்போர்னில் நடைபெற்ற இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில், இந்திய அளவில் சிறந்த இயக்குனருக்கான விருது “மகாராஜா” படத்தை இயக்கியதற்காக நிதிலனுக்கு வழங்கப்படும் என்று விருது குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News