Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

ப்ரவுன் நிற மார்டன் புடவையில் விதவிதமான போஸ்… ரசிகர்களை ஏங்கவைத்த ரச்சு…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் அறிமுகமான ரச்சிதாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக தன்னுடைய கலரை மாற்றிக்கொண்டு நடித்தது பலரின் அப்ளாஸை அள்ளியது. அந்த சீரியல் ஹிட்டடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதன்படி அதே சேனலில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 2வில் நடித்தார். அந்த சீரியல் ரச்சிதாவுக்கு மேலும் புகழ் வெளிச்சத்தை கொடுத்தது.

திருமணம்: இந்த சூழலில் பிரிவோம் சந்திப்போம் தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் மேட் ஃபார் ஈச் அதராக வாழ்ந்துகொண்டிருந்த சூழலில் திடீரென இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. கடந்த பல மாதங்களாக இரண்டு பேரும் பிரிந்தே வாழ்ந்து வருகிறார்கள்.நிலைமை இப்படி இருக்க பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்துகொண்டார் ரச்சிதா. அதில் தனது திறமையை பயன்படுத்தி விளையாண்ட அவர் சில வாரங்கள் தாக்குப்பிடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு நடிகை ரச்சிதா சில படங்களிலும் நடித்துவருகிறார். அந்தவகையில் தற்போது அவர் Fire என்ற படத்திலும் நடித்துவருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் தொடர்பான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கொஞ்சம் தூக்கலான கிளாமரோடு தோன்றியிருந்தார் ரச்சிதா. அது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்தப் படம் தவிர்த்து எக்ஸ்ட்ரீம் என்ற படத்திலும் நடித்துவருகிறார் ரச்சிதா மகாட்சுமி.

இந்நிலையில் ரச்சிதா மகாலட்சுமி தனது புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் ப்ரவுன் நிற புடவையுடன் விதவிதமான போஸ் கொடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அழகில் மயக்குறாரே என்று கமெண்ட்ஸ் செய்து அப்புகைப்படங்களை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News