‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படங்களை இயக்கியவர் எஸ்.ஆர். பிரபாகரன். இவர் அடுத்து ஸ்டோன் எலிஃபன்ட் கிரியேஷன்ஸ் எனும் தனது பட நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கும் படம் ‘றெக்கை முளைத்தேன்.’


இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன், ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் நரேன், கஜராஜ், ஜீவா ரவி, மீரா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில், கல்லூரி இளைஞர்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் ஐந்து புதுமுகங்களை அறிமுகம் செய்கிறேன். கிரைம் பிராஞ்ச் அதிகாரியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது” என்றார். இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.