வடிவேலு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு ‘இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி’ திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். அதன் பிறகு பல வெற்றி படங்களை இயக்கினார். கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கசடதபற’ திரைப்படத்தை இயக்கினார். அதன் பிறகு யோகி பாபு நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் ‘போட்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தக் கதையில் 80 வருடங்களுக்கு முன், இந்திய சுதந்திரத்திற்கு முன் நடக்கும் கதையாக அமைந்துள்ளது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் பிரெசிடென்சியைப் பற்றி குண்டு வீசியபோது 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க பதுங்குகிறார்கள்.
இப்படத்தில் யோகி பாபு போட் மேனாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.ஆக்ஸட் 2ல் திரையரங்குகளில் வெளியாகிறது.