தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள ‘ரகுதாத்தா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று டீசர் வெளியானது.

இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் எம்.எஸ் பாஸ்கர், தேவ தர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனரான சுமன் குமார் இதற்கு முன் ஃபேமிலி மேன் என்ற பிரபல வலைத் தொடருக்கு கதையாசிரியராக இருந்தார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் முதல் பாடலான ‘அருகே வா’ பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. இப்பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார். படத்தின் இரண்டாவது பாடலான ‘ஏக் காவ் மே’ என்ற பாடல் நேற்று முன் தினம் வெளியானது. ஹிந்தி விஷயத்தை வைத்து காமெடியாக இந்த படத்தை எடுத்துள்ளனர் . இந்தி திணிப்புக்கு எதிராக இப்படம் பேசும் வகையில் இதன் டீசர் இருந்த நிலையில் படத்தின் டிரைலர்தற்போது வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ட்ரெய்லரில் பொண்ணா அடக்கமா எல்லாம் இருக்க முடியாது என்ற வசனம் கவனத்தை ஈர்த்துள்ளது.