Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

பைக் சேஸ், ஆக்ஷன் காட்சிகளென தெறிக்கவிட்ட விஜய்யின் ‘தி கோட்’ பர்த்டே ஷாட்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தி கோட்’.விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12.01 மணிக்கு ‘பர்த்டே ஷாட்ஸ்’ என படத்தின் ஒரு வீடியோவை வெளியிட்டார்கள். 50 விநாடிகள் மட்டுமே ஓடும் ஒரு குறும்பட டீசர் அது.

வெளிநாட்டு இடங்கள், சித்தார்த்தாவின் அற்புதமான ஒளிப்பதிவு, திலீப் சுப்பராயன் மாஸ்டரின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள், யுவனின் சிறந்த பின்னணி இசை, வெங்கட் ராஜன் செய்த வேகமான எடிட்டிங் என பரபரப்பானது அந்த டீசர்.முதல் விநாடியிலிருந்து பைக்கில் சிலர் செல்வதை மட்டும் காட்டி, 29வது விநாடியில் பைக்கில் இரண்டு விஜய்களில் ஒருவர் பைக்கை ஓட்டி, மற்றவர் இடது கையால் சிலரைச் சுடும் காட்சியுடன் படத்தின் டைட்டில் வருகிறது.

விஜய் சிங்கிளாக வந்தாலே மாஸ் ஆக இருக்கும், டபுள் விஜய் என்றால் டபுள் மாஸ் என இந்த வீடியோவை பிறந்தநாள் பரிசாக விஜய் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.முதல் சிங்கிளான ‘விசில் போடு’ பாடல் வந்தபின் படம் பற்றி ரசிகர்கள் மத்தியில் வேறுவிதமான அபிப்ராயம் உருவானது. ஆனால், தற்போது இந்த டீசர் வந்த பின் படம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இது படத்திற்குப் பேருதவியாக இருக்கும். இன்று மாலை படத்தின் இரண்டாவது சிங்கிளான “சின்னச் சின்ன கண்கள்..” பாடல் வெளியாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News