Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

பேய் கதாபாத்திரத்துக்கு கூட இங்கு கவர்ச்சி தேவைப்படுகிறது… அரண்மனை 5 அப்டேட் சொன்ன சுந்தர் சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் அடுத்து வளர்ந்துக் கொண்டு வரும் பிரான்சைஸ் படமாக அரண்மனை திரைப்படம் இருக்கிறது. ஹாரர் கதைக்களத்தை மையமாக வைத்து சுந்தர் சி அரண்மனை 1 படத்தை 2014 ஆம் ஆண்டு இயக்கினார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த இரண்டு பாகத்தை இயக்கினார்.இதன் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. இந்த படத்தில் சுந்தர் சி-க்கு தங்கையாக தமன்னா நடிக்க, தமன்னாவிற்கு ஜோடியாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார்.

மேலும் இவர்களுடன் இணைந்து ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் பாடல் ஒன்றுக்கு குஷ்பு மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் நடனமாடியுள்ளனர்.இந்த படமானது கடந்த மே 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. அந்த வகையில் கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

இதன் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி கலகலப்பு-3 படத்தை இயக்கப் போவதாக தகவல் பரவியது. அது மட்டும் இல்லாமல் தமன்னா, வடிவேலு கூட்டணியில் புதிய படம் சுந்தர் சி இயக்கப் போகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய சுந்தர் சி, “பேய் படத்தில் ஏன் கவர்ச்சி இருக்கிறது என்று கேட்கிறார்கள். பேயாக இருந்தாலும் அது கவர்ச்சியாக வந்தால் தான் இங்க வியாபாரமே நடக்குது. அரண்மனை 5 ஆம் பாகத்திலும் கவர்ச்சி இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் அரண்மனை பாகம் 5 கட்டாயமாக இயக்கவுள்ளார் என உறுதியாகியுள்ளது. அடுத்த எந்த திரைப்படத்தை இயக்கப்போகிறார் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News