பேட் கேர்ள்’ டீசரில் குறிப்பிட்ட சமூக பெண்களை கொச்சை படுத்தும் வகையிலும், மனதை புண்படுத்தும் வகையிலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி தணிக்கை சான்று வழங்கக்கூடாது என சென்சார் போர்டுக்கு உத்தரவிட கோரி கோவையை சேர்ந்தவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘பேட் கேர்ள்’ படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என்று சென்சார் போர்டு விளக்கம் அளித்துள்ளது. மேலும் சென்சார் போர்டுக்கு அளித்த மனு பரிசீலிக்கப்படும் என்று சென்சார் போர்டு கூறியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்து வர்ஷா பரத் இயக்கியுள்ள ‘பேட் கேர்ள்’ திரைப்படம் 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.