Tuesday, November 19, 2024

பேச்சி 2 உருவாகிறதா? #Pechi2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹாரர் திரில்லர் படமாக வெளியானது பேச்சி திரைப்படம். இப்படத்தில் பால சரவணன், காயத்ரி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இந்த நிகழ்வில் பேச்சி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது என்ற தகவலை தயாரிப்பாளர் கோகுல் பினாய் தெரிவித்தார்.மேலும் அவர் பேசும் போது ஆகஸ்ட் 1ம் தேதி திரையிடப்பட்ட ‘பேச்சி’ சிறப்பு காட்சியின் போதே படத்தின் வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தின் புரோமோஷனுக்காக ஒரு சிறிய பட்ஜெட் ஒதுக்கினோம். ஆனால், அதை தாண்டி மாஸாக படம் ரீச் ஆகி உள்ளது. பேச்சியாக நடித்த சீனிபாட்டிக்கு நன்றி. பேச்சி படத்தின் இரண்டாம் பாகம் கேட்கிறார்கள், வெரூஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் பண்ண போகிறோம், அதற்குப் பிறகு பேச்சி இரண்டாம் பாகம் உருவாகும் என்றார்.

- Advertisement -

Read more

Local News