நடிகை ரேஷ்மா முரளிதரன் நடிக்கவுள்ள புதிய தொடரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. முதலில் செல்லமே எனப் பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தங்க மீன்கள் என மாற்றப்பட்டுள்ளது.நடிகை ராதிகா நடிப்பில் செல்லமே என்ற பெயரில் ஏற்கெனவே தொடர் ஒளிபரப்பானதால், இந்தத் தொடரின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இத்தொடரில் நடிகை ரேஷ்மா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிஷ்ணு மேனன் நாயகனாக நடிக்கிறார்.
