Tuesday, November 19, 2024

புஷ்பா 2 ரிலீஸ் தேதி மாற்றம்… அறிக்கை விட்ட படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்தியாவில் வசூல் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து, புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. இதில் நடிகர் பகத் பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

புஷ்பா-2 படத்தின் இரண்டு பாடல்களும் டீசரும் வெளியிடப்பட்டு மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி புஷ்பா-2 வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

இதனால் படம் வெளியிட தாமதம் ஏற்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News