Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

புஷ்பா பட பாடலுக்கு ஆட்டம் போட்ட ஹன்சிகா… செம்மையாக ஆட்டம் போடுறாரே என ரசிகர்கள் கமெண்ட்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். இந்தியில் சின்னத்திரை தொடர்களிலும் சில நிகழ்ச்சிகளிலும் தோன்றிய இவர், 2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசமுதுரு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர், தனுசுடன் இணைந்து தமிழில் அறிமுகமானார். இந்தப் படத்தில் ரசிகர்களை கவர்ந்த ஹன்சிகா, விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல் விஜய்யுடன் இரண்டு படங்களில் தொடர்ந்து நடித்துள்ளார்.முன்னணி நடிகையாக வந்த ஹன்சிகா, ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையவே திருமணமாகி செட்டில் ஆனார். திருமணம் ஆன பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் சில படங்கள் வெளியாவதற்காக காத்திருக்கின்றன. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள ஹன்சிகா, தனது போட்டோஷூட் புகைப்படங்கள், படங்களைப் பகிர்ந்து வருகிறார்.

தற்போது புஷ்பா பட பாடலுக்கு ஹன்சிகா ரீல்ஸ் செய்து Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ராஷ்மிகா நடிப்பில் வெளியான சாமி பாடலுக்கு ஹன்சிகா ரீல்ஸ் செய்துள்ளார். பாவாடை தாவணியில் நீண்ட தலை முடியுடன் அவர் காணப்படுகிறார். அவரது இந்த லுக் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பாடலில் தனியாக ஆடாமல், சிலருடன் இணைந்து ஆடியுள்ளார். அடுத்தடுத்த பட வாய்ப்புகளை ஈர்க்கும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அடுத்ததாக காந்தாரி, ரவுடி பேபி, மேன் ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News