Monday, December 30, 2024

புல்லட் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் ராகவா லாரன்ஸ்‌… இயக்குனர் யார் தெரியுமா? #BULLET

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ், தனது காஞ்சனா சீரிஸ் படங்களால் பெரும் வரவேற்பைப் பெற்றவர். திரைப்படங்களில் மட்டுமின்றி சமூக சேவைகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இவரின் 47-வது பிறந்தநாளையொட்டி, “புல்லட்” திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்தப் படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார், இவர் “டைரி” படத்தை இயக்கியவராவார். “புல்லட்” திரைப்படத்தை பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக வைஷாலி ராஜ் நடிக்கிறார். தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய தகவல்கள் ராகவா லாரன்ஸின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News